Oplus_131072
உளுந்து பொடி செய்வது எப்படி…..
தேவையானவை:
கருப்பு உளுந்து-200 கிராம்
மிளகு-10
வரமிளகாய்-4
கருவேப்பிலை-கைப்பிடி அளவு
பெருங்காயத்தூள்-சிறிது
உப்பு-தேவைக்கேற்ப
எண்ணெய்-1டீஸ்பூன்
செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்து,மிளகு,கருவேப்பிலை, மிளகாயை மிதமான சூட்டில் வறுத்து ஆறியதும் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து பொடிக்கவும்.
குறிப்பு:
சூடான சாதத்துடன் நல்லெண்ணை சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.




