தமிழகத்தில் பெரும்பான்மையான மக்கள் சமையலுக்கு இஞ்சி பூண்டு விழுதுகளை வீட்டில் அரைப்பதை விட கடையில் வாங்கி பயன்படுத்துவதே அதிகம், அப்படி இருக்கும் பட்சத்தில் கடையில் வாங்கி பயன்படுத்தும் இஞ்சி பூண்டு விழுதுகள் உடலுக்கு ஆரோக்கியமற்றது என்று தெரிய வருகிறது..
வேலை சுலபமென்று நினைத்து எளிதில் கிடைக்கக்கூடிய இஞ்சி பூண்டு விழுதுகளை அருகில் உள்ள கடைகளிலோ அல்லது சூப்பர் மார்க்கெட்டிலோ நாம் வாங்கி வந்து சமையலுக்கு பயன்படுத்தி வருகிறோம் அப்படி இருக்கும் பட்சத்தில் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இஞ்சி பூண்டு பேஸ்ட் செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவலாக வைரலாகி வருகிறது, குறைந்தபட்ச சுகாதாரம் கூட இல்லாமல் இஞ்சி பூண்டுகளை கால்களில் மிதித்து கொண்டிருப்பதை வீடியோவாக வெளிவந்த நிலையில் இணையவாசிகள் பலரும் இந்த நிறுவனத்தை கண்டித்தும் மேலும் தரமற்ற உணவு முறைகளை கடைகளிலோ அல்லது சூப்பர் மார்க்கெட்டிலோ பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கூடாது என்று தங்களின் கருத்துக்களை இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்..!!




