எதுவும் மாறப் போவதில்லை..!! உன்னால் எதையும் மாற்ற முடியாது..!! படித்ததில் பிடித்தது..!!

எதுவும் மாறப் போவதில்லை …

உன்னால் எதையும்
மாற்ற முடியாது…

மெய் தானே…

இனி என்னால்
எதை மாற்ற முடியும்…..

®️விலையில்லாத
அன்பினை விளையாட்டுப்
பொம்மையாகக் கொண்டாடித்
தீர்த்த கடந்த காலத்தினை
மாற்றத் தான் இயலுமா…

®️இல்லை
மீண்டும் புதுப்பித்துக்
கொள்ளத் தான் தெரியுமா…

அப்படியே மாற்றினாலும்
என்னால் எதையும் சரியாகத் தான்
செய்யத் தெரியாத கண்ணிருந்தும்
குருட்டுப் பெண்ணால் மாற்ற
முடியாதே …

என் பிடிவாதத்தின்
மொத்த நிழல் வடிவமாக
நானே மாறினாலும்
என்னால் எதையும்
மாற்ற இயலாது ….

கரடுமுரடான காட்டாறு
வெள்ளமாக அடித்துச்
செல்லும் மனதின்
எண்ணங்களுக்கு
திசையறியாமல்
தத்தளித்துக் கரை சேராமல்
கடலில் கரைந்திடும்
மழை நீரில் தேடினாலும் விலையில்லாத
தொலைத்த அன்பினை
கிடைக்கவோ மாற்றவோ
இயலாத எனஂனால்
எதை
மாற்ற முடியும்…..

எதுவும் மாறப் போவதில்லை 💕

Read Previous

பொதுச் சின்னங்கள் ஒதுக்கீடு..!! நவம்பர் 11 முதல் விண்ணப்பிக்கலாம்..!!

Read Next

ஒரே நாளில் தொழில் உரிமம்..!! தமிழ்நாடு அரசு உத்தரவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular