எத்தனை ஆயிரம் ஆண்டு ஆனாலும் இந்த நோய்க்கு இது தான் மருந்து..!! சித்தர்களின் மருத்துவம்..!!

எத்தனை ஆயிரம் ஆண்டு
ஆனாலும் இந்த நோய்க்கு இது தான் மருந்து; சித்தர்களின்
மருத்துவம்

மூளைக்கு வல்லாரை
முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
எலும்பிற்கு இளம்பிரண்டை
பல்லுக்கு வேலாலன்
பசிக்கு சீரகமிஞ்சி

கல்லீரலுக்கு கரிசாலை
காமாலைக்கு கீழாநெல்லி
கண்ணுக்கு நந்தியாவட்டை
காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி
முகத்திற்கு சந்தனநெய்

மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு மருதம்பட்டை
அம்மைக்கு வேம்புமஞ்சள்
உடலுக்கு எள்ளெண்ணை
உணர்ச்சிக்கு நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு

கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே
கருப்பைக்கு அசோகுபட்டை
களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
குரலுக்கு தேன்மிளகே!
விந்திற்கு ஓரிதழ்தாமரை

வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு தாமரைப்பூ
சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை
கக்குவானுக்கு வசம்புத்தூள்
காய்ச்சலுக்கு நிலவேம்பு

விக்கலுக்கு மயிலிறகு
வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி
நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ ர்
வெட்டைக்கு சிறுசெருப்படையே

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலா வேலன்
நஞ்செதிர்க்க அவரிஎட்டி
குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்

பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
பெருவயிறுக்கு மூக்கிரட்டை
கக்கலுக்கு எலுமிச்சை ஏலம்
கழிச்சலுக்கு தயிர் சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
விதைநோயா கழற்சி விதை
புண்படைக்கு புங்கன் சீமையகத்தி
புழு குடற்கு வாய்விளங்காமணக்கு
கால்வெடிப்பா மருதாணி கிளிஞ்சல்
கரும்படை வெட்பாலை சிரட்டை

கால்சொறிக்குவெங்கார பனிநீர்
கானாகடிக்கு குப்பைமேனி
உடல்பெருக்க உளுந்து எள்ளு
உளம்மயக்க கஞ்சா கள்ளு
உடல்இளைக்க தேன் கொள்ளு
உடல் மறக்க இலங்க நெய்யே.

Read Previous

திருநீறு பூசும்போது செய்யக்கூடாதவை..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Read Next

அட்சய திருதியை பற்றிய 60 தகவல்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular