எந்தப் பருவத்துக்கு எந்தக் கீரை கூடாது..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Oplus_131072

எந்தப் பருவத்துக்கு எந்தக் கீரை கூடாது?

* கோடைகாலத்தில் (சித்திரை, வைகாசி) அரைக்கீரை மற்றும் புளிச்சகீரையைத் தவிர்க்க வேண்டும்.

* காற்று அதிகம் உள்ள காலங்களில் (ஆனி, ஆடி) அரைக்கீரை, கீரைத்தண்டு, சிறுகீரை, பருப்புக்கீரை மற்றும் முள்ளங்கிக்கீரை போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

* முன் மழைக்காலங்களில் (ஆவணி, புரட்டாசி) சிறுகீரை, பருப்புக்கீரை, வெந்தயக்கீரை, முள்ளங்கிக்கீரை மற்றும் பசலைக்கீரை ஆகியவற்றைச் சாப்பிடக் கூடாது.

* பின் மழைகாலங்களில் ( ஐப்பசி, கார்த்திகை) அகத்திக்கீரை, சிறுகீரை, பசலைக்கீரை மற்றும் கீரைத்தண்டு போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

* முன் பனிக்காலங்களில் (மார்கழி, தை) அகத்திக்கீரை, சிறுகீரை, பசலைக்கீரை மற்றும் முள்ளங்கிக்கீரை ஆகியவை வேண்டாம்.

* பின் பனிக்காலங்களில் ( மாசி, பங்குனி) சிறுகீரை, பசலைக்கீரை மற்றும் பருப்புக்கீரையைத் தவிர்க்கலாம்.

* பொன்னாங்கண்ணிக்கீரை, கொத்தமல்லிக்கீரை, புதினா, முருங்கைக்கீரை, மணத்தக்காளிக்கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை, கறிவேப்பிலை போன்றவற்றை எல்லாப் பருவங்களிலும் சாப்பிடலாம்.

 

Read Previous

பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பதால் கிடைக்கும் ஆரோக்கியம் நன்மைகள்..!!

Read Next

குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular