எந்த உணவு ஆயினும் இந்த சைடு டிஷ் வேற லெவல்ல இருக்கும்..!! அசத்தலான முட்டை மசாலா இதோ..!!

முட்டை என்றாலே நம் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்றாகும். அதிலும் தோசை சப்பாத்தி ஆகியவற்றுக்கு தொட்டுக்கொள்ள ருசியாக முட்டையை வைத்து ஏதேனும் செய்தால் நாம் அதை சாப்பிடாமல் இருப்போமா. அப்படி என்று முட்டை மசாலா வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்வது என்று இந்த பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள் :

முட்டை வறுப்பதற்கு :

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

மிளகாய் தூள், மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி

வேகவைத்த முட்டை – பத்து

மசாலாவுக்கு :

வெங்காயம் – ஐந்து

பச்சை மிளகாய் – 5

இஞ்சி, பூண்டு விழுது – இரண்டு தேக்கரண்டி

மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி

மிளகாய் தூள் – மூன்று தேக்கரண்டி

தனியாத்தூள் – 2 தேக்கரண்டி

கரம் மசாலா – அரை தேக்கரண்டி

சீரகத்தூள், மிளகுத்தூள் – ஒரு தேக்கரண்டி

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

கொத்தமல்லி இலை – சிறிதளவு

செய்முறை :

முதலில் வெங்காயம் பச்சை மிளகாய் கொத்தமல்லி ஆகியவற்றை சிறிதாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உப்பு, மிளகாய் தூள் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விடவும். அதில் வேகவைத்த முட்டையை சேர்த்து மூன்று முதல் ஐந்து நிமிடம் நன்றாக வறுத்து எடுக்கவும்.

மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். கடைசியாக மஞ்சள் தூள் உப்பு மிளகாய் தூள் தனியா தூள் சீரகத்தூள் ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் வேகவைத்து கரம் மசாலா மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும். முட்டையை நன்றாக கலந்து விட்டு இறுதியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான முட்டை மசாலா தயார்.

Read Previous

உடல் எடையை குறைப்பவர்களுக்கு அருமையான செய்முறை..!! கேழ்வரகு கொள்ளு தோசை செய்து பாருங்கள்..!!

Read Next

நுரையீரல் பாதிப்பிலிருந்து தப்பிக்க இதையெல்லாம் செய்து பாருங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular