வீட்டிலேயே இருக்கும் நபர்களுக்கு தின்பண்டம் என்றாலே மிகவும் பிடிக்கும். அதிலும் இப்போது கோடை விடுமுறை குழந்தைகளுக்கு வந்திருப்பதால் அவர்கள் அடிக்கடி ஏதேனும் சாப்பிட கேட்பார்கள். அப்படி கேட்கும் குழந்தைகளுக்கு இந்த வடை மோர் குழம்பு செய்து கொடுத்து பாருங்கள. நிச்சயம் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்:
மெதுவடை அல்லது பருப்பு வடை – 10,
தயிர் – ஒரு கப்,
மஞ்சள் தூள் – அரை கரண்டி,
பெருங்காயத்தூள் – கால் கரண்டி,
கொத்தமல்லி, கருவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு,
அரிசி – ஒரு கப்,
துவரம் பருப்பு – ஒரு கப்,
பச்சை மிளகாய் – 3,
சீரகம் – ஒன்று,
வெங்காயம், தக்காளி – தலா ஒன்று,
பூண்டு – ஐந்து பல்,
இஞ்சி – சிறிதளவு
செய்முறை:
முதலில் அரிசி துவரம் பருப்பை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அடுத்து கொத்தமல்லியை சிறிது சிறிதாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். தக்காளி வெங்காயமாகியவற்றை கொரகொரப்புடன் அரைத்துக் கொள்ளவும். அரிசி மற்றும் துவரம் பருப்புடன் சீரகம் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தயிர் மஞ்சள் தூள் பெருங்காயத்தூள் இரண்டு கப் நீர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அறிந்து கொள்ளவும். பின் இதை அரிசி விழுதுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க தேவையான பொருட்களை போட்டுவிட்டு அரைத்த விழுதுகளை அதில் போட்டு கட்டிகள் இல்லாமல் கலந்து கொள்ளவும்.
இதை மிதமான தீயில் நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்துள்ள தயிர் கலவையை ஊற்றி கொதிக்க விடவும். இறுதியாக கருவேப்பிலை கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான வடை மோர் குழம்பு தயார்.




