எளிய பரிகாரங்கள்..!! அரிய பலன்கள்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க மக்களே..!!

Oplus_131072

எளிய பரிகாரங்கள்..
அரிய பலன்கள்.!.

1)குடும்ப தோஷம்:

குடும்பத்துல அமைதியே இல்லை, எதற்கெடுத்தாலும் பிரச்னை. இந்த நிலை மாற ஒரு எளிய பரிகாரம்.

நெல், அட்சதை, விரலி மஞ்சள், ஒரு ரூபா காசு, வெத்தலை பாக்கு, அதோட, உங்க குடும்பத்துல கால மான மூதாதையர்களோட பெயரை (உங்க ஞாபகத்துல உள்ள வரை) ஒரு வெள்ளைத் தாளில் எழுதுங்க.

அனைத்தையும் ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில கட்டி, பூஜை அறைல வச்சு அதுக்கு ஊதுபத்தி, சாம் பிராணி காட்டி, மனசார உங்க இஷ்ட தெவத்தை வணங்கி வாங்க. கூடிய சீக்கிரம் உங்க குடும்பத்துல சந்தோஷம் பெருகும், அமைதி ஏற்படும்.

2)காரிய சித்தி பரிகாரம்:

சுத்தமான கலச சோம்புல நல்ல பசும் பாலை எடுத்துக்குங்க. அதை பூஜை அறைல வச்சு உங்களோட இஷ்ட தெவத்தைப் பிரார்த்தனை பண்ணிக்குங்க.

அதில் கற்கண்டு, மஞ்சள் பொடியை சேத்துக்குங்க. பிறகு, அதை வேப்ப மர அடியிலோ அல்லது அரச மர அடியிலோ கொட்டி வணங்குங்க.

பாலில் கற்கண்டு கரைவது மாதிரி உங்களோட பிரச்னைகள் கரைந்து போகும். மஞ்சள் மங்கலத்தின் அடையாளம் இல்லையா? அதனால நீங்கள் மேற்கொள்ளும் அனைத்துக் காரியங்களும் மங்களகரமா முடியும்.

3)மாணவர்களுக்குத் ஞாபக சக்தி கூட பரிகாரம்:

மாணவர்களுக்கு ஞாபக சக்தி கூடவும், பரீட்சைல அதிக மதிப்பெண் பெறவும் அரசமரத்தோட பட்டைய நல்லா விழுது மாதிரி அரைச்சு தேர்வு எழுதப்போற மாணவர்கள் நெத்தியில தடவி வாங்க.

குறிப்பா, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை நாட்கள்ல இரவு நேரத்துல இதைப் பூசுங்க. இது மூளை நரம்புகளுக்கு வலு கூட்டும். படிச்சதும் தெளிவா நினைவுல இருக்கும்.

சில குழந்தைகளுக்கு படிச்சதை உள் வாங்கிக்கிற திறமை கொஞ்சம் குறைவா இருக்கும்.

அவங்களை மந்தம்னு திட் டாம, வல்லாரைப் பொடி 100 கிராம், வசம்பு 15 கிராம் சேர்த்து அரைச்சு, அதை 5 கிராம் தேன்ல கலந்து சாப்பிடக் கொடுத்து வந்தா, மந்தத் தன்மை மாறும். குழந்தைகளின் புத்தியும் கற்பூரமா பிரகாசிக்கும்.

ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஞானக் கடவுள் தட்சிணாமூர்த்திக்கு எண்ணெய் அபிஷேகம் செய்து அந்த எண்ணெயை நீங்கள் தினசரி உபயோகப்படுத்தும் எண்ணெயோடு கலந்து, படிக்கும் உங்களது குழந்தைகளின் தலைக்குத் தேய்த்துவர அவர்களது நினைவாற்றல் பெருகும். ஞானம் கூடும்.

அதோட, ஹயக்ரீவ துதி, காயத்ரி துதி, சரஸ்வதி துதி போன்றவற்றை 32 தடவை சோல்லி வந்தாலும் பலனுண்டு.

அதாவது, ஒவ்வொன்றையும் 32 தடவை சொல்லணும்.

மொத்தமா இல்லை. தமிழ்ல சரஸ்வதி அந்தாதி, சகலகலாவல்லிமாலையும் இருக்கு. இதையும் பாராயணம் செய்யலாம்.

மேதா சூக்தம், மேதா தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம், சரஸ்வதி அஷ்டோத்திரம், வித்யா லக்ஷ்மி அஷ்டோத்திரம் இதெல்லாம்கூட படிக்கலாம்.

சரஸ்வதி வழிபாடு நல்ல பலன் தரும். உடனே கூத்தனூர் போன்ற கோயில்களுக்கு அலைய வேண்டாம்.

வீட்லயே சரஸ்வதி படத்துக்கு முன்னால, ஒரு நெய் தீபத்தை ஏத்தி வெச்சு வழிபடுங்க. ஆனா, அது காமாட்சி விளக்கா இருக்கணும். அதோடு, மாணவர்கள் தினமும் காலை, மாலை இரு வேளையும்,

ஸ்ரீசரஸ்வதி த்வாதச நாம ஸ்தோத்திரத்தை தினமும் பாராயணம் செய்து வர, நல்ல ஞாபக சக்தி கூடும்.

Read Previous

வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

Read Next

எல்லா மனிதர்களும் முக்கியமானவர்களே என்பதை உணர்த்தும் பதிவு..!! அருமையான பதிவு கட்டாயம் படிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular