நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் ஏழு குதிரைகள் ஓவியம் பற்றிய தகவல்கள்..!!

Oplus_131072

நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் ஏழு குதிரைகள் ஓவியம் பற்றிய தகவல்கள்…

ஏழு குதிரைகள் கொண்ட ஓவியங்களை வீட்டிலும், அலுவலகத்திலும் வைப்பதன் மூலம், நமக்கு நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டுகிறது.

வீட்டில் நல்ல காரியங்கள் நடப்பதற்கு, நாம் கிழக்கு திசையை நோக்கி அந்த படத்தை மாட்டிவைக்க வேண்டும்.

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வுக்காகக் காத்திருந்தால், வடக்குத் திசையில் ஓடும் குதிரைகளின் படத்தை மாட்ட வேண்டும்.

வாழ்க்கையில் பெயர், புகழ், மரியாதை பெற வேண்டுமானால் வீட்டின் தெற்கு திசையில் ஓடும் குதிரைகளின் படத்தை மாட்டி வைக்கலாம். இது உங்களுக்கு வாழ்க்கையில் விரைவான முன்னேற்றத்தைத் தரும் உங்களின் புகழும் செல்வமும் பாராட்டப்படும்.

கடன் தொல்லையால் கஷ்டப்படுபவர்கள் ஒரு ஜோடி குதிரை பொம்மைகளை மேற்கு திசையில் வைக்கலாம். இதனால் மகாலட்சுமியின் அருள் வீட்டில் தங்கும். மன நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

ஏழு குதிரை ஓவியங்களின் பின்னணியில் சூரியன் உதிக்கும் வகையில் இருப்பது மங்களகரமாக கருதப்படுகிறது. இது ஒருவருடைய வாழ்க்கையில் வெற்றியையும் செல்வ வளத்தையும் அதிர்ஷ்டத்தையும் அதிகரிக்கச் செய்யும்.

சிவப்பு நிற பின்னணியோடு இருக்கக்கூடிய ஏழு குதிரைகளின் ஓவியம் செவ்வாய் கிரகத்தின் தாக்கத்தை ஏற்படுத்தும். சமூகத்தில் ஒருவருக்கு மரியாதையை அதிகம் ஏற்படுத்திக் கொடுக்கும்.

நீல நிறப் பின்னணியில் இருக்கக்கூடிய ஏழு குதிரைகள் ஓவியம் சனி கிரகத்தை குறிக்கிறது. இது நல்லிணக்கத்தையும் அமைதியையும் அதிகரித்துக் கொடுக்கும்.

படுக்கையறையில் இந்த ஏழு குதிரைகள் அடங்கிய ஓவியத்தை வைக்கக் கூடாது. பூஜை அறை, படிக்கும் அறை, கழிப்பறையை எதிர்கொள்ளும் சுவர்கள், பிரதான கதவு ஆகியவற்றில் ஏழு குதிரை ஓவியத்தை வைப்பது வாஸ்து சாஸ்திரத்தின்படி சரியானதல்ல.

ஏழு குதிரைகள் அடங்கிய இந்த ஓவியத்தை வரவேற்பறையில் வைக்கலாம். இந்த குதிரைகள் தண்ணீரில் ஓடாமல் திறந்த நிலத்தில் ஓடுவதுபோல இருக்க வேண்டும்.

Read Previous

மலச்சிக்கலை நீக்கி குடலுக்கு ஆரோக்கியம் தருகிறதா நூல்கோல்..??

Read Next

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு..?? இந்த பழமொழியின் உண்மையான அர்த்தம் இதுதான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular