ஒருமுறை குழந்தைகளுக்கு இந்த சில்லி சப்பாத்தி செஞ்சு கொடுத்து பாருங்க..!!

Oplus_131072

சில்லி சப்பாத்தி செய்வது எப்படி…..

தேவையான பொருட்கள்:

சப்பாத்தி – 2
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 1
சில்லி சாஸ் – 1 டேபிள்ஸ்பூன்
சோயா சாஸ் – 1 டேபிள்ஸ்பூன்
தக்காளி சாஸ் – 1 டேபிள்ஸ்பூன்
சிவப்பு ஃபுட் கலர் – 1 துளி
கொத்தமல்லித் தழை – கால் கட்டு
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப.
செய்முறை:

ஒரு பாத்திரத்தில் சப்பாத்தியை சின்ன சின்னத் துண்டுகளாக்கி கொள்ளவெம். வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் உப்பு, சில்லி சாஸ், தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்து வதக்கவும். அடுத்து ஃபுட் கலரில் சிறிது தண்ணீர் கலந்து, அதையும் சேர்க்கவும். பிறகு அதில் சப்பாத்தி துண்டுகளைப் போட்டுக் கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு மிளகாய்த் தூள் சேர்த்து கொள்ளலாம்.

சுவையான சூப்பரான மாலை நேர சிற்றுண்டி சில்லி சப்பாத்தி தயார். இதனுடன் அசைவ பிரியர்கள் முட்டைகளை சேர்த்து சமைத்தால் முட்டை சில்லி சப்பாத்தி செய்யலாம்.

 

Read Previous

தயிர் வெண்டைக்காய் செய்வது எப்படி..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க மக்களே..!!

Read Next

கொஞ்சம் காமடி..!! கொஞ்சம் கருத்து..!! நகைச்சுவை கதை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular