ஒரு இயற்கை மரணம் எத்தனை பேரை வாழ வைக்கிறது என்று பாருங்கள்..!!

Oplus_131072

 

1, இறந்தவரை ஐஸ்பெட்டில் வைக்க வேண்டும். ஐஸ் பெட்டிக்காரர் லாபம் அடைகிறார்..

2,இறந்தவர் வீட்டில் பந்தல் போடுவார்கள் பந்தல்காரர் லாபம் அடைகிறார்.

3, இறந்தவர்களின் உறவுக்காரர்கள் வெளியூரில் இருப்பார்கள் அவர்கள் வரும்போது ஒரு வாகனத்தை அமர்த்தி
மொத்தமாக வருவார்கள். அந்த வாகனத்தின் முதலாளி லாபம் அடைகிறார்..

4, இறப்புக்கு வந்தவர்கள் எல்லாம் பூமாலை வாங்கிக் கொண்டு வருவார்கள் பூக்கடைக்காரர் லாபம் அடைகிறார்..

5, மேளம்தாளம், அடிப்பவர்களும். நடனம் ஆடுபவர்களும் லாபம் அடைகிறார்கள்..

6, சங்கு ஊதுபவர் லாபம் அடைகிறார்.

7, இறந்தவர்களின் பிள்ளைகள் கட்டியிருந்த துணியை துவைத்து கொடுப்பவர் லாபம் அடைகிறார்.

8, இறப்புக்கு வந்தவர்கள் முக்கியமானவர்கள் வாய்க்கரிசி கொண்டு வருவார்கள் அரிசி கடைக்காரர் லாபம் அடைகிறார்..

9, இறப்புக்கு வந்தவர்கள் பசியோடு போக கூடாது என்று சாப்பாடு போடுகிறார்கள் அதனால் சமையல்காரர்களும் ஒட்டல் காரர்களும் லாபம் அடைகிறார்கள்.

10, இறந்தவரை எரிக்க வேண்டும் விறகு கடைக்காரர் லாபம் அடைகிறார்..

11, இறந்தவரை இறுதி ஊர்வலம் கொண்டு செல்லும் வண்டி முதலாளி லாபம் அடைகிறார்..

12. இறந்தவருக்கு கொல்லிக்குடம் உடைக்க வேண்டும். #மண்பானை கடைக்காரர் லாபம் அடைகிறார்..

13, இறந்தவரை இறுதி ஊர்வலம் எடுத்து செல்லும்போது பட்டாசு வெடிப்பார்கள். பட்டாசு கடைக்காரர் லாபம் அடைகிறார்

14, இறந்தவரை எரிக்க வேண்டும் விறகு
கடைக்காரன் லாபம் அடைகிறார்.

15, இறந்தவரை எரிக்க வேண்டும் சுடுகாட்டில் எறிப்பவர் லாபம் அடைகிறார்.

16, இறந்தவர் வீட்டில் யாரும் பசியோடு இருக்க கூடாது என்பதற்காக மறுநாள் காலையில் இட்லி வாங்கி வைப்பார்கள் இட்லி கடைக்காரர் லாபம் அடைகிறார்..

17, எல்லா காரியமும் முடிஞ்சு 16 வது நாள் கருமாதி வைப்பார்கள் அப்போது ஜவுளி கட்டுவார்கள் ஜவுளி கடைகாரர் லாபம் அடைகிறார்…..

ஒரு இயற்கை மரணத்தால் நேரடியாக 17 பேர் லாபம் அடைகிறார்கள்…

மறைமுகமாக எத்தனை பேர் லாபம் அடைவார்கள்….

இதெல்லாம் கிராமங்கள் மட்டுமே…

Read Previous

இஞ்சி பால் குடிப்பதால் உடலில் நடக்கும் அற்புதம்..!!

Read Next

வியாதிகள்.. வரமா அல்லது சாபமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular