Oplus_131072
ஒரு முறை இறால் எடுத்தால் இந்த மாதிரி சிம்பிளா செஞ்சு பாருங்கள்
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சின்ன துண்டு பட்டை , ஒரு கிராம்பு , ஒரு ஏலக்காய் , 1/4 டீஸ்பூன் சோம்பு சேர்த்து பொரிய விடவும்
பொடியா நறுக்கின பெரியவெங்கம் ஒன்று , 1 பச்சைமிளகாய் , கொஞ்சம் கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமா வதக்கி எடுக்கவும்
அதில் ஒரு ஸ்பூன் இடிச்ச இஞ்சி , பூண்டு சேர்த்து பொடியா நறுக்கின 2 தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
பிறகு 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
1 டீஸ்பூன் மல்லித்தூள் ,
கால் டீஸ்பூன் கரமசாலா ,
1 டீஸ்பூன் மிளகுத்தூள் ,
1/4 டீஸ்பூன் சீரகத்தூள்
சேர்த்து சுத்தம் செய்த இறால் கூடவே உப்பு சேர்த்து
10 நிமிடம் வேகவைத்து இறக்கினால் அருமையான இறால் தொக்கு ரெடி.




