கடலைக்கறி குழம்பை இப்படி செய்து பாருங்கள்..!! அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய செய்முறை..!!

உடலுக்கு பல நன்மைகளை தரும், சுவையான கடலைக்கறி எப்படி செய்வது என்று இன்று தெரிந்துகொள்ளலலாம்.

தேவையானவை :

கறுப்பு கொண்டைக்கடலை – 150 கிராம்,
வெங்காயம் – 3,
தக்காளி – 2,
காய்ந்த மிளகாய் – 5,
மிளகாய்த் தூள் – 2 கரண்டி,
மஞ்சள் தூள் – 1 கரண்டி,
கரம் மசாலா தூள் – 1 கரண்டி,
தனியா – 1 கரண்டி,
தேங்காய் – கால் அல்லது அறை முறி,
கடுகு – 1 கரண்டி,
சீரகம் – அரை கரண்டி,
புளி – சிறிதளவு.

செய்முறை:

முதலில் கொண்டைக்கடலையை சுமார் 8 மணிநேரம் ஊறவைத்த பின் தேங்காய், காய்ந்த மிளகாய், தனியா ஆகியவற்றை கடாயில் வறுத்து, அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

பின் வானலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து வெங்காயம், கறிவேப்பில்லை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் தக்காளி சேர்க்க வேண்டும்.

தக்காளி வதங்கிய பின் மசாலா வகைகளை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும். பச்சை வாசனை போனதும், புளியை சேர்க்க வேண்டும்.

சிறிதாக கொதி வந்ததும் ஏற்கனவே உப்பு சேர்த்து வேகவைத்து, எடுத்து வைத்துள்ள கடலையை சேர்த்து கொதிக்க விடவேண்டும். பின், அரைத்த விழுதை சேர்த்து கொதிக்கவிட்டால், சுவையான கடலைக்கறி தயார். இதனை கட்டியாகும் வரை கொதிக்கவிட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

 

Read Previous

உலர் நெல்லிக்காயில் இருக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா..!! அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய பதிவு..!!

Read Next

நாம் அனைவருக்கும் பிடித்த சிற்றுண்டியான பால்பன் எப்படி செய்வதென்று தெரியுமா..!! சுலபமான செய்முறை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular