முன்பெல்லாம் ஆட்டுக்கல்லில் இட்லி தோசைக்காக மாவை அரைத்து உபயோகித்து வந்தார்கள். அதனால் எந்த நோயும் அவர்களை அண்டவில்லை. ஆனால் காலம் மாற மாற நாம் கண்ட உணவுகளை பணம் கொடுத்து சாப்பிட்டு நோய்களை நாமாகவே விலைக்கு வாங்கி வருகிறோம். இப்போது இருக்கும் உலகில் கிரைண்டரில் கூட மாவு அரைக்க சோம்பேறித்தனம் பட்டு விட்டு கடைகளில் வாங்குவது பலக்கமாகிவிட்டது. அப்படி வாங்குவதனால் ஏற்படும் தீமைகள் என்னென்னவென்று உங்களுக்கு தெரியுமா.
நாட்கள் நகர நகர கடைகளில் விற்கப்படும் இட்லி மாவு கெடக்கூடாது என்பதற்காக கால்சியம் சிலிகேட் என்கிற வேதிப்பொருளை சேர்க்கின்றனர். இது பயன்படுத்துகிறதனால் மாவு சீக்கிரம் கெட்டுப் போகாமல் வெகு நாட்கள் வரும். ஆனால் நமக்கோ செரிமான கோளாறு ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்படும். நமது வீடுகளின் நாம் மாவு ஆட்டுகின்ற பொழுது அறைப்பதற்கு முன்பும் பின்பும் கிரைண்டரை நன்றாக கழுவி விடுவோம். ஆனால் சில மாவு அரைக்கும் நிறுவனங்களில் கிரைண்டரை சரியாக கழுவாமல் மாவு ஆட்டுவதால் மாவில் ஈகோலி என்னும் பாக்டீரியா தாக்கம் அதிகரிக்கிறது.
நாம் இந்த இட்லி தோசையை எவ்வளவுதான் வேகவைத்து சூடு படுத்தி சாப்பிட்டாலும் இந்த பாக்டீரியா அழிவதில்லை. இந்த பாக்டீரியாவினால் வயிற்று வலி வாந்தி மயக்கம் இரைப்பை நோய் அஜீரணக் கோளாறு வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் நமக்கு ஏற்படலாம். ஆகையால் கடைகளில் மாவு வாங்குவதை விட்டுவிட்டு வீட்டிலேயே கிரைண்டரில் ஆவது அந்த மாவை அரைத்து உபயோகிக்குமாறு நிபுணர்கள் எச்சரிக்கின்றன.




