Oplus_131072
சிறுநீரகக் கற்கள் இருக்கிறது என்றால் இந்த இலையைக் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சிறுநீரகக் கல் கரைந்து வெளியேறும் என்று பலர் கூறுகின்றனர். அது எந்த இல்லை மற்றும் அதை எப்படி சாப்பிட வேண்டும் என்று இந்த பதிவில் பார்ப்போம்.
ரணகள்ளி இலைகளில் உள்ள ஆன்டி பயாடிக் பண்புகள் காய்ச்சலின் அறிகுறிகளை போக்கவும், மஞ்சள் காமாலையை குணப்படுத்தவும் உதவும். ரணகள்ளி இலைகளில் உள்ள பிளாவனாய்டுகள், கிளைகோசைடுகள் மற்றும் கரிம அமிலங்கள் சிறுநீரக கல்லைக் கரைக்கவும், சிறுநீரகக் கல் ஏற்படாமல் தடுக்கவும், நீரிழிவு நோயை நிர்வகிக்கவும் உதவும்.
ரணகள்ளி சாறு குடித்து வருவதன் மூலம் சிறுநீரகம் தொடர்பான கோளாறுகளை குணப்படுத்தலாம். சிறுநீரகக் கற்களை கரைக்க ரணகள்ளி இலைகளை தொடர்ந்து 7 நாட்கள் எடுத்துக் கொள்வதன் மூலம் எவ்வளவு பெரிய சிறுநீரகக் கற்களையும் கரைத்து விடலாம். சிறுநீரகக் கற்களை கரைக்க ரணகள்ளி செடியை பிடுங்கி இலைகளை பறிக்கக் கூடாது.
செடியின் சிறிய இலையில் ஆரம்பித்து பெரிய இலைகள் வரை தொடர்ந்து 7 நாட்கள் வரை காலையில் வெறும் வயிற்றில் நன்றாக மென்று சாப்பிட வேண்டும். இல்லையெனில், அதனை சாறு எடுத்தும் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இதன் மூலம் சிறுநீரக கற்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்.
ரணகள்ளி இலைகளில் உள்ள டையூரிடிக் பண்புகள் சிறுநீர் ஓட்டத்தை ஊக்குவிப்பதோடு, சிறுநீரக கற்களை வெளியேற்ற உதவுவதோடு, சிறுநீரக கற்களுடன் தொடர்புடைய வலியைக் குறைக்க உதவும் என ஆய்வுகள் கூறுகின்றன.
காலையில் ஒரு இலையை எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போது தான் இது உங்கள் ரத்தத்தில் கலக்கும்.




