கணையம் தான் உணவை செரிக்க உதவும் நொதிகளை சுரக்கிறது. மேலும் இது தான் உணவில் இருந்து சத்துக்களை பிரித்தெடுத்து மற்ற பாகங்களுக்கு அனுப்புவதும் கூட.
அதுமட்டுமின்றி, கணையம் தான் உடலில் இரத்த சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவும் இன்சுலின் என்னும் ஹார்மோனையும் சுரக்கிறது. இவ்வளவு வேலையை செய்யும் கணையத்தில் நச்சுக்கள் சேராமலா இருக்கும். எனவே கணையத்தில் சேரும் நச்சுக்களை நீக்கவும், கணையத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஒருசில உணவுப் பொருளை உட்கொள்ள வேண்டியது அவசியம்.
⭕ #கணையம்_வீக்கம்_அடையும்
#பொழுது❗❗❗
👉அதிகவலி,
👉வயிற்றுபோக்கு
👉அதிகவலி,
👉ஜுரம்,
👉கணைய அழற்சி,
👉வலி மற்றும் வீக்கம் கொண்ட கணையம்,
👉கணைய புற்றுநோய்
போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
என வயிறு சம்பந்தமாக பல்வேறு வலிகளை பற்றி அறிந்திருப்போம். சிலவற்றினை அனுபவித்து சிகிச்சையும் பெற்றிருப்போம், கணையம் எனப்படும் #பான்கிரஸ் வலியினை சிலர் அனுபவித்து இருப்பர். சிலருக்கு பிறரை பார்த்த அனுபவம் இருக்கும். இதன் வலி மிகக் கடுமையாக இருக்கும். கணையம் மிக முக்கிய ஹார்மோனை இன்சுலின் சுரப்பதோடு மேலும் பல முக்கிய உடல் நலனுக்கான வேலைகளைச் செய்கின்றன.
⭕ கணைய வீக்கம்
ஏற்படக் காரணம் என்ன❓
👉பித்தப்பையில் கற்கள்,
👉மது பழக்கம்
இவை இரண்டும் கணைய வீக்கத்திற்கு முக்கிய காரணம் ஆகின்றன. மேலும்………
👉ரத்தத்தில் அதிக கொழுப்பு இருந்தாலும்……
👉சில வகை மருந்துகளும்,
👉சில வகை கிருமி தாக்குதல்களும்
கணைய வீக்கத்தினை ஏற்படுத்தும். நீண்ட கால கணைய வீக்கம் நிரந்தரமாய் கணையத்தினை பாதித்துவிடும்.
மது அருந்துபவர்கள் மது அருந்துவதனை நிறுத்தி விட்டாலே பாதிக்கு மேல் பிரச்சினைகள் குறையும். கூடவே புகை பிடிப்பதனையும் நிறுத்துவது மிகவும் நல்லது.
இந்த வலி ஏற்பட்டால் தாமதிக்காமல் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். திரவ உணவு சூப், ஜூஸ் போன்றவை வீக்கத்தினை குறைக்க உதவும். மேலும் அதிக கொழுப்பு இல்லாத உணவு மற்றும் சிறிய அளவில் அடிக்கடி உண்பது ஜீரண மண்டலத்திற்கும் உதவியாய் இருக்கும்.
கணைய குழாய், பித்தப்பை குழாய் இவை கற்களால் அடை பட்டால் திடீரென ஏற்படும் வலிக்கு மிக அவசர சிகிச்சை தேவைப்படும். மருத்துவமனையில் சேர்க்க வேண்டியது இருக்கும். சில நாட்களில் இந்த வலி கட்டுப்படும். சில காலம் தொடரும். இந்த பாதிப்பு 3-6 வாரங்கள் வரை நிதானமாகவே ஆறும்.
மது குடிப்பவர்களுக்கு ஏற்படும் கணைய பாதிப்பு அவர்களின் ஆயுள் காலத்தினைக் கூட குறைத்து விடும்.
⭐ கணையத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுப் பொருட்கள் என்னவென்று பார்த்து, அவற்றை உணவில் சேர்த்துக் கொள்வோமா❗
💊#ப்ராக்கோலி 💊
ப்ராக்கோலி, காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், கேல் போன்றவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்து வருவது கணையத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது. முக்கியமாக இந்த உணவுப் பொருட்கள் கணைய புற்றுநோய் வருவதைத் தடுக்கும்.
💊#பூண்டு 💊
பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் பயோஆக்டிவ் பொருள், கணையத்தில் எவ்வித கட்டிகளும், காயங்களும் ஏற்படாமல் நல்ல பாதுகாப்பு தரும். எனவே முடிந்த வரையில் அன்றாட உணவில் பூண்டு சேர்த்து வாருங்கள்.
💊#சிவப்பு_திராட்சை 💊
சிவப்பு திராட்சையில் உள்ள ரெஸ்வரோட்ரோல் என்னும் பொருள், ப்ரீ ராடிக்கல்களால் கணைய செல்கள் பாதிக்கப்படாமல் தடுக்கும். ஒருவேளை உங்களுக்கு சிவப்பு திராட்சை சாப்பிட பிடிக்காவிட்டால், ரெட் ஒயின் குடிக்கலாம். ஆனால் கணைய அழற்சி இருந்தால், ரெட் ஒயின் குடிக்கக்கூடாது.
💊#ப்ளூபெர்ரி_மற்றும்_செர்ரி 💊
இந்த பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக நிறைந்துள்ளது. எனவே இவற்றை அவ்வப்போது உட்கொண்டு வந்தால், அவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதோடு, ப்ரீ-ராடிக்கல்களால் செல்கள் பாதிக்கப்படாமல் இருக்கும்.
💊#சர்க்கரைவள்ளிக்_கிழங்கு 💊
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பீட்டா கரோட்டீன் வளமாக நிறைந்துள்ளது. இவை கணைய புற்றுநோய் அண்டுவதைத் தடுக்கும். ஏனெனில் அந்த அளவில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டை கொண்டது தான் சர்க்கரைவள்ளிக் கிழங்கு. இதேப்போல் ஆப்ரிகாட், கேரட், சோளம் போன்றவற்றிலும் பீட்டா கரோட்டீன் அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
💊#காளான்💊
இதிலுள்ள நார் சத்து, செலினியம், பொட்டாஷியம், வைட்டமின் டி2, குறைந்த கலோரி சத்து இவை கணைய பாதுகாப்பிற்கு ஏற்றவை.
💚 பூண்டு, சின்ன வெங்காயம் இவற்றினை அன்றாடம் உணவில் சேருங்கள்.
💚 பசலைக்கீரைக்கு கணையத்தினை புற்று நோயிலிருந்து கூட பாதுகாக்கும் திறன் உண்டு. வாரம் இரு முறையாவது இதனை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
💚 கொழுப்பு அதிகம் இல்லாத தயிர், குடலுக்கு நல்ல பாக்டீரியாவினை அளிக்கின்றது. குடல், செரிமானம் இவற்றுக்கு உதவியாய் இருக்கின்றது. கணையத்தினை பாதுகாக்கின்றது.
மருத்துவரை_அணுகவும்
* மேல் வயிற்று வலி, வயிற்று வலி பின் முதுகு வரை செல்லுதல்.
* சாப்பிட்ட பிறகு அதிக வலி, ஜூரம், வேக நாடி துடிப்பு.
* வயிற்றுப் பிரட்டல், வாந்தி, வயிற்றினைத் தொட்டாலே வலி ஆகியவை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.




