கண்டிப்பா இந்த சமையல் குறிப்புகளை எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

Oplus_131072

♥இஞ்சி நீண்ட நாள் கெடாமல் இருக்க ஒரு கிண்ணத்தில் இஞ்சியை வைத்து தண்ணீர் ஊற்றி பிரிட்ஜில் வைக்கலாம். தண்ணீரை மட்டும் 2 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி வந்தால் இஞ்சி நீண்ட நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும்.

♥அரிசி, காய்கனிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் அவை நன்றாக வளரும்.

♥ காலி பிளவரை சமைக்கும் போது ஒரு டீஸ்பூன் பால் சேர்த்தால் அதன் வெள்ளை நிறம் மாறாமல் இருக்கும்.

♥சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னர் சிறிதளவு உப்பை கையில் தடவினால் மாவு கையில் ஒட்டாது.

♥பில்டர் காபி டிகாஷன் தயாரான உடன் அப்படியே எடுத்து கலக்காமல் சிறிது சூடாக்கி பின்னர் கலந்தால் காபி வாசனை அதிகமாக இருக்கும்.

♥ மாம்பழ மில்க் ஷேக் செய்யும் போது குளிர்ந்த பால் பாதியளவும், கன்டென்ஸ்டு மில்க் பாதியும் கலந்து தயாரித்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

♥அடை மாவில் தண்ணீர் அதிகமாகி விட்டால் சோளமாவை கலந்தால் கெட்டியாகும். சுவையும் நன்றாக இருக்கும்.உளுந்து வடை செய்யும்போது மாவில் சிறிதளவு சேமியாவை பொடித்து போட்டால் நன்றாக இருக்கும்.

♥ சப்பாத்தி குருமாவில் பைனாப்பிள் துண்டுகள், திராட்சை, கிஸ்மிஸ்பழம் போன்றவைகளை சேர்த்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.

♥சாம்பார் பொடி செய்யும்போது சிறிதளவு சுக்கை தட்டி போட்டு கலந்து அரைக்க வேண்டும். இதனால் வாசனை கூடும். பருப்பில் உள்ள வாயுவையும் போக்கும். பாயசம் செய்யும் போதும் சிறிது சுக்கு போடலாம்.

♥ரவா தோசை மொறுமொறுப்பாக வருவதற்கு ரவையை நன்றாக வறுத்து அதன் பின்னர் அரைமணி நேரம் நீரில் ஊற வைத்து பிறகு தேவையான மற்ற பொருட்களை சேர்க்க வேண்டும்.

Read Previous

ராக்கெட்டை செங்குத்தாக ஏவுவது ஏன்..?? விமானம் போல சாய்வாக ஏவினால் என்ன ஆகும்..??

Read Next

உங்களுக்கு காலில் இந்த பிரச்சனை உள்ளதா..?? இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular