நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து கண் திருஷ்டியை போக்க பல செயல்கள் செய்வார்கள். கண் திருஷ்டி என்பது மிகவும் மோசமான ஒன்று. இதனால் பல பேருக்கு பல கஷ்டங்கள் சொல்ல முடியாத நோய்கள் போன்றவைகள் கூட இந்த கண் திருஷ்டியால் வரலாம். பெரியோர்கள் சும்மாவா சொல்லி இருக்கிறார்கள் கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று. ஆம் கண் திருஷ்டி அவ்வளவு ஆபத்தானது. குறிப்பாக கண் திருஷ்டி என்பது ஒருவர் தான் முன்னேறுவதை நினைவில் கொள்ளாமல் அடுத்தவன் இவ்வளவு முன்னேறி விட்டானே என்று கெட்ட எண்ணம் கொள்வதால் அந்த நபரின் எதிர்மறையான எண்ணங்கள் குறிப்பிட்ட இந்த நபர் மீது கண் திருஷ்டியாக மாறும். பெரியோர்களுக்கு மட்டும் தான் கண் திருஷ்டியா என்றால் முற்றிலுமாக கிடையாது சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை ஏன் குழந்தைகள் வரை கூட இந்த கண்திருஷ்டி இருக்கிறது. இந்த கண் திருஷ்டியை போக்க வீட்டில் இதையெல்லாம் கடைபிடித்தால் போதும் என்று ஆன்மீக சாஸ்திரம் சொல்கிறது. அது என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
கண் திருஷ்டியை போக்க சிலர் சூடம் பயன்படுத்துவார்கள். சிலர் உப்பு பயன்படுத்துவார்கள். சிலர் மிளகாய் பயன்படுத்துவார்கள். கல் உப்பு என்பது கண் திருஷ்டியை போக்கும் மிகச்சிறந்த பொருளாகும். இதை ஒரு சிலர் ஒரு கை கல் உப்பு எடுத்து தலையை மூன்று முறை சுற்றி ஓடும் தண்ணீரில் கரைத்து விடுவார்கள். மிளகாயை கிராமங்களில் விறகு அடுப்பை எரிய வைத்து இந்த மிளகாயை கொண்டு தலையை சுற்றி இந்த எரியும் அடைப்பில் போட்டு கண் திருஷ்டியை போக்குவார்கள். சிலர் சூடத்தைக் கொண்டு தலையே சுற்றி வழியில் முச்சந்தியில் வைத்து எரித்து கண் திருஷ்டியை போக்குவார்கள். குழந்தைகள் கண் திருஷ்டியால் மிகவும் பாதிக்கப்படுவார்கள். அதற்கு ஒரு வேஷ்டி துணி சிறிது கிழித்து அதனை திரி போல் செய்து அந்த திரியை அந்த குழந்தையின் தலை முதல் கால் வரை இடது புறம் தடவி மற்றொரு திரியை வலது புறம் தடவி அதனை சுவர் ஓரமாக வைத்து எரிக்க வேண்டும் இவ்வாறு செய்தால் அந்த குழந்தையின் மேல் உள்ள கண் திருஷ்டி நீங்கி குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இந்த கண் திருஷ்டியை போக்க எந்த நாட்கள் சிறந்தது எந்த நேரம் சிறந்தது என்றால் செவ்வாய் கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறந்தது மற்றும் சூரியன் சாயும் நேரமான மாலை நேரம் சிறந்தது. இது போன்ற விஷயங்களை செய்தால் வீட்டில் கண் திருஷ்டி நீங்கி நேர்மறை ஆற்றலும் தெய்வ சக்திகளும் நம் வீட்டில் குடி புகுமாம்.




