கத்தரிக்காய் தயிர் குழம்பு செய்வது எப்படி என்று பார்த்து அதன் ருசி அறிவோம்..!!

கத்திரிக்காய் என்றாலே பெண்களின் கர்ப்பப்பைக்கு மிகவும் ஆரோக்கியம் தரகூடிய காய்கறிகளின் சிறப்பு பெற்றதாக உள்ளது…

கத்திரிக்காய் தயிர் குழம்பு செய்வதற்கு தேவையான பொருட்கள் கத்திரிக்காய் கால் கிலோ நீளமாக நறுகவும், தயிர் ஒரு கப், இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன், கரம் மசாலா அரை ஸ்பூன், சீரகத்தூள் அரை ஸ்பூன், தனியா தூள் அரை ஸ்பூன், மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன் வெங்காயம் ஒன்று பெருங்காயத்தூள் சிட்டிகை பொடியாக நறுக்கிய கொத்தமல்லி கைப்பிடி எண்ணெய் தேவைக்கு ஏற்ப உப்பு தேவைக்கு ஏற்ப, அழைப்பதற்கு தேவையான பொருட்கள்
பட்டை இரண்டு, சீரகம் அரை ஸ்பூன், தேங்காய் துருவல் அரை கப், கசகசா ஒரு ஸ்பூன், மிளகு எட்டு, பூண்டு நாலு பல்லு, பச்சை மிளகாய் 4,செய்முறை தயிருடன் இஞ்சி பூண்டு விழுது காரம் மசாலா தூள் சேர்த்து ஜீரகத்தூள், தனியா தூள் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும், கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தும் கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும், அரைக்க கொடுத்துள்ளதை அரைத்துக் கொள்ளவும், கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கி அரைத்து விழுதை சேர்த்து அடைப்பை சிம்மில் வைத்து ஐந்து நிமிடம் கொதிக்க விட வேண்டும், இதில் மஞ்சள் தூள் பெருங்காயத்தூள் சேர்த்து தயிர் கலவை உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும், நன்றாக கொதித்து வரும்போது வதக்கிய கத்திரிக்காய் சேர்த்து மூடி அடுப்பை சிம்மில் வைத்து ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும் இப்பொழுது சுவையான கத்திரிக்காய் தயிர் குழம்பு ரெடி..!!

Read Previous

உடலில் கால்சியம் அளவு அதிகரிக்க ராகியை இப்படி யூஸ் பண்ணி பாருங்க..!!

Read Next

ஐயப்ப மாலையுடன் தர்காவில் வழிபட்ட நடிகர் ராம் சரண்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular