Oplus_131072
கருப்பு கொண்டை கடலை குழம்பு 😋 இந்த ஒரு குழம்பு போதும் காலைல Breakfastla இருந்து Night dinner வரைக்கும் எல்லாத்துக்குமே Match ஆகும் ❤️
📌 கருப்பு கொண்டை கடலையை சுமார் 6- 8 மணி நேரம் ஊற வைத்து குக்கருக்கு மாற்றி மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து நான்கு விசில் விட்டு இறக்கவும்
📌 ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பட்டை ஒரு துண்டு, சோம்பு ஒரு தேக்கரண்டி, சின்ன வெங்காயம் ஒரு கைப்பிடி அளவு, பூண்டு மூன்று பல், இஞ்சி ஒரு துண்டு மற்றும் கருவேப்பிலை சேர்த்து நான்கு வதக்கவும்
📌 வெங்காயம் கண்ணாடி பதம் வந்தவுடன் மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி, மிளகாய்த்தூள் ஒரு தேக்கரண்டி, மல்லித்தூள் இரண்டு தேக்கரண்டி, தேங்காய் துருவல் அரை கப் சேர்த்து நன்கு வதக்கவும்
📌 தேங்காய் நன்கு வறுப்பட்டு மசாலா வாசம் வரும்போது அடுப்பை அணைத்து சூடு ஆறியதும் அரைத்து எடுத்துக் கொள்ளவும்
📌 ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு கருவேப்பிலை போட்டு தாளித்து வேகவைத்த கடலையும் அரைத்த மசாலாவும் தேவையான அளவு உப்பும் சேர்த்து குழம்பிற்கு தேவையான தண்ணீர் ஊற்றி நன்கு 15-20 நிமிடம் கொதிக்க விடவும்
📌 குழம்பிலிருந்து எண்ணெய் பிரிந்து வரும் நேரத்தில் அடுப்பை அணைக்கவும் 😍




