கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவதூறு பதிவு செய்த தவெக மற்றும் அதிமுக ஐடி விங்க் நிர்வாகி உட்பட 4 பேரை சென்னை பெருநகர தெற்கு மண்டல சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரியை சேர்ந்த தவெக உறுப்பினர் டேவிட்(25), புதுக்கோட்டையை சேர்ந்த தவெக நிர்வாகி கண்ணன் (25), சென்னையை சேர்ந்த சசிகுமார் (48) ஆகியோர் ஏற்கனவே கைதாகியிருந்தனர். தற்போது தூத்துக்குடியைச் சேர்ந்த அந்தோணி சகாய மைக்கேல் ராஜ் (37) என்பவர் கைதாகியுள்ளார்.




