கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தவெக மாவட்ட செயலாளர் மதியழகன், நகர பொறுப்பாளர் பவுன்ராஜ் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை 14 நாட்கள் காவலில் வைக்க கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இருவரும் இன்று (அக்.03) திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இரண்டு பேரும் வரும் திங்கட்கிழமை (அக்.06) ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




