கரூர் தான்தோன்றிமலையைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகன் கவுசிக்குமார். இவருக்கு வயது 17. இவர் பசுபதிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று அக்டோபர் 21ஆம் தேதி தான்தோன்றிமலையில் உள்ள இறைச்சி கடையில் தற்காலிக வேலைக்கு சென்றுள்ளார். அப்போது கோழியை சுத்தம் செய்ய மெஷினை இயக்க அங்கிருந்த சுவிட்சை போட்டபோது மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



