கறிவேப்பிலையில் உள்ள ஆரோக்கிய பலன்கள் ஏராளம். ஆனால் உண்ணும் போது கறிவேப்பிலை கையில் கிடைத்தால் அதை ஒதுக்கி வட்டு சாப்பிடுபவர்கள் தான் இங்கு
அதிகம். அப்படி ஒதுக்கிவிட்டு சாப்பிடுபவர்களுக்கு இந்த கறிவேப்பிலை பொடியை செய்து கொடுங்கள். இந்த கறிவேப்பிலை பொடி தோசை இட்லி சாதம் என அனைத்திற்கும் பொருத்தமாக இருக்கும். கறிவேப்பிலை பொடி எப்படி பண்றது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் கறிவேப்பிலை – 50 கிராம் உளுத்தம்பருப்பு – 20 கிராம் மிளகாய் வற்றல் – 10 எண்ணெய் – சிறிதளவு செய்முறை வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, மிளகாய் இவற்றினை தனித்தனியாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு சிறிது எண்ணெய் விட்டு கறிவேப்பிலையை நன்றாக மொறு மொறுவென்று வறுத்து எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும். மிக்ஸியில் முதலில் மிளகாய் வற்றல், உளுத்தம்பருப்பு இரண்டையும் இட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும். அதன்பிறகு அதனுடன் வறுத்த கறிவேப்பிலையைச் சேர்த்து பொடி செய்யவும். விருப்பம் உள்ளவர்கள் சிறிதளவு உப்பும், பெருங்காயப் பொடியும் சேர்த்து அரைத்துக்கொள்ளலாம். சூடான சாதத்திற்கு பொடியுடன் நல்லெண்ணெய்விட்டு சாப்பிட மிகவும் ருசியாய் இருக்கும்.




