நம் வீட்டில் இருக்கும் பெரியோர்கள் கூறும் ஒவ்வொன்றிற்கும் ஒரு அர்த்தம் இருக்கும். அதுபோல தான் காகம் கத்தினால் நம் வீட்டிற்கு விருந்தாளிகள் வரப் போகிறார்கள் என்றும் சில கிராமப்புறங்களில் இன்றும் கூறுவார்கள். மேலும், விலங்குகள் மற்றும் பறவைகள் நமக்கு நடக்க இருப்பதை முன்கூட்டியே அறியும் சக்தி கொண்டவை. இதன்படி காகம் வீட்டிற்கு வந்தால் நல்லதா கெட்டதா என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
காகம் வீட்டிற்கு வந்தால் சுப நிகழ்வு வீட்டில் நடக்கப்போகிறது என்று கூறுவார்கள். மேலும் காகம் வீட்டிற்குள் வந்தால் அது நல்ல சகுனமாகவும் இருக்கலாம் இல்லையென்றால் கெட்ட சகுனமாகவும் இருக்கலாம். இது அது இருக்கும் திசையை பொருத்தே அமைகிறது. இந்நிலையில் வீட்டிலிருந்து நாம் சுப காரியத்திற்கோ, அல்லது வேலைக்கு செல்லும் போது மேற்கு நோக்கி காகங்கள் பறந்தால் நீங்கள் அந்த வேலையில் வெற்றி பெறுவீர்கள் என்று அர்த்தம். அதேபோல உங்கள் வீட்டு மொட்டை மாடியில் அல்லது வீட்டிற்கு முன்னோ காகங்கள் ஒன்று கூடி கூச்சலிட்டால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அர்த்தம். கிழக்கு நோக்கி அல்லது வடக்கு நோக்கி காளை வேளையில் உங்கள் வீட்டு முன் பறந்தால் உங்கள் வீட்டிற்கு விருந்தாளிகள் வருவார்கள் என்று அர்த்தம். நாம் வெளியூர்களுக்கு முக்கியமான வேலையாக பயணம் செல்லும் போது ஒரு காகம் மற்றொரு காகத்திற்கு உணவு கொடுப்பதை நாம் கண்டால் அந்தப் பயணம் சிறப்பாக அமையும் நீங்கள் போன வேலை வெற்றிகரமாக முடியும் என்று அர்த்தம். உங்கள் வீட்டின் தெற்கு பக்கம் காகம் அமர்ந்தால் அது அபாயகரமான ஒரு அறிகுறியாகும். மேலும் காகம் வந்து நமது வீட்டின் சுவர்களில் அமரும்பொழுது நாம் வைக்கும் உணவை அது சாப்பிட்டால் நம்முடைய ஆசைகள் அனைத்தும் நிறைவேற போகிறது என்று அர்த்தம். மேலும், காகம் கூடு கட்டும் குச்சிகளை உங்கள் வீட்டின் உள்பகுதியில் போட்டால் அந்த வீட்டில் குழந்தை செல்வம் கிடைக்க போகிறது அதுவும் மகாலட்சுமியே வந்து குழந்தையாக பிறக்கும் என்று அர்த்தம். இவ்வாறு காகம் இருக்கும் திசை கற்கும் திசை போன்ற பல காரணங்களை வைத்து நமக்கு நடக்க போவதை நாம் தெரிந்து கொள்ளலாம்.




