மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதால் அந்நாட்டு சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
இதுவரை 2,344 பேருக்கு எபோலா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 37 பேர் உயிரிழந்ததையடுத்து, மொத்த உயிரிழப்பு 930 ஆக உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொற்று மேலும் பரவாமல் தடுக்க சிகிச்சை, தனிமைப்படுத்தல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் காங்கோவுடனான விமானப் போக்குவரத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளன. உலக சுகாதார அமைப்பும் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.




