IBPS PO/MT 2026: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்..!! சீக்கிரம் அப்ளை பண்ணுங்க..!!

 

பொதுத்துறை வங்கிகளில் 6,175 ‘புரொபேஷனரி ஆபிசர் (PO)’ மற்றும் ‘மேனேஜ்மென்ட் டிரெய்னி (MT)’ பணியிடங்களை நிரப்புவதற்கான IBPS CRP PO/MT தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளை (ஜூலை 21) கடைசி நாளாகும்.

 

ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் IBPS-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான www.ibps.in-ல் விண்ணப்பிக்கலாம்.

 

தேர்வர்கள் முதல்நிலை எழுத்துத் தேர்வு (ஆகஸ்ட் 2026), முதன்மை எழுத்துத் தேர்வு (நவம்பர் 2026) மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

 

விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ளவர்கள், கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க நாளைக்குள் விண்ணப்பப் பதிவை நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read Previous

காங்கோவில் எபோலா பரவல் தீவிரம்: 930 பேர் உயிரிழப்பு – பல நாடுகள் விமானக் கட்டுப்பாடு..!!

Read Next

வாணியம்பாடி அருகே 4 வயது குழந்தையை தெருநாய் கடித்தது: பொதுமக்கள் அச்சம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular