காதலிக்கு ஏங்கி தவிக்கும் காதலன்..!! அருமையான காதல் வரிகள்..!! படித்ததில் பிடித்தது..!!

நாம் பொது வெளியில் சந்தித்து
கொண்டால் புன்னகைத்துக்
கொண்டே விடைபெறுவோம்..
நம் இருவருக்குள்ளும் இப்போது
இருக்கும் இந்த வெற்றிடம்
முன்பொருமுறை
அன்பால் , அக்கறையால், தேடலால்
மிகப்பெரிய காதல் ஒன்றால்
நிரப்பப்பட்டிருந்தது..

இன்று கண்ணீர்
வெறுப்பு, சண்டைகள், கோபங்கள், மனஸ்தாபம் அத்தனையாலும் நிறைக்கப்பட்டிருக்கிறது ..

எப்படி உன்னை தேடித் தேடி
தொலைந்து போன அன்பு
இத்தனை வெறுப்பாய் போனது..
உன் மீதான அக்கறைகள் அத்தனையும் வெட்டியெறியப்பட்டு அனாதையாய்
போனது ..

உன் குறுஞ்செய்திக்காய்
காத்திருந்த பொழுதுகள்
உன் குரல் கேட்கத் துடிதுடித்த
நிமிடங்கள்..
அருகில் அமர்ந்து பேசித் தீர்த்த
அந்த நேர காதல் எப்படித்தான்
கரைந்து போனது..

வா மீண்டும் ஒருமுறை
என்னுடைய தவறுகளை
திருத்திக்கொண்டு மீண்டும்
வருகிறேன்..💔

Read Previous

சொர்க்கமே ஆனாலும் சொக்கத்தங்கம் நீ இல்லைனா சொகமேது..!! கண் கலங்க வைத்த பதிவு..!!

Read Next

BSNL வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு..!! மலிவான விலையில் கிடைக்கும் திட்டங்கள் இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular