நமக்குள் சண்டையில்லை
சச்சரவில்லை
ஆனாலும்
கருத்து வேறுபாடுகள்
நமக்கு முன்
சலங்கை கட்டி ஆடியது.
நமக்குள் புரிதல் இல்லையென
உன்னையும் என்னையும்
தனக்குள்ளிருந்து
வெளிநடப்பு செய்துவிட்டு
என்னில் உன்னையும்
உன்னில் என்னையும்
இப்போதும்
தேடிக் கொண்டிருக்கிறது காதல்.
நம் பிரியத்தின் அழுத்தம்
பிடிவாதத்தை தளர்த்த
போராடி தோற்றுவிட்டு
ஆசையிடம்
முறையிட்டுக் கொண்டிருக்கிறது.
புரிதலுக்கு புரியவைக்க
சமாதானத்தை தூதுவிட
தயக்கத்தை கட்டிக்கொண்டு
அழுகிறது எதிர்பார்ப்பு.
அன்பே
நாம் பிரிந்தது பிரிந்ததாகவே
இருக்கட்டும்.
நமக்குள் எந்த உறவும் வேண்டாம்.
யாரோவாக இருந்துகொண்டு
மனதில் எதுவும் இல்லாமல்
நீ ஹலோ என்று வா
நான் ஹாய் என்று வருகிறேன்.
மீண்டும் முதலில் இருந்தே
ஆரம்பிக்கலாம்.
இந்த முறை தவறேயில்லாமல்
காதலிக்க கற்றுக்கொடுக்க
காதல் தயாராகவே இருக்கிறதாம்
💝💝💝💝💝💝💝




