பிரபல நடிகரான ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தி விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்தார் .சோசியல் மீடியா முழுவதும் ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து செய்தி தான் உலா வந்தது. திருமண வாழ்க்கையில் மன கஷ்டங்கள் இருந்தாலும் படங்களில் ஜெயம் ரவி தொடர்ந்து நடித்து வருகிறார். கைவசம் ஜீனி, பிரதர், காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட திரைப்படங்களில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். சமீபத்தில் தான் பிரதர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
அந்த விழாவில் கலந்து கொண்ட ஜெயம் ரவியிடம் விவாகரத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில்ளித்த ஜெயம் ரவி விவாகரத்து விஷயம் வருத்தம் அளிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு குடும்பத்தில் சில பிரச்சனைகள் இருந்தது. தனிப்பட்ட காரணங்களால் அதை என்னால் சொல்ல முடியாது. என் பசங்களுக்காக நான் எதையும் பேச வேண்டாம் என நினைக்கிறேன். ஏற்கனவே இரண்டு முறை ஆர்த்திக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தேன். அவங்க அப்பாவும் வந்து பேசினார்.
அப்படி இருக்கும்போது விவாகரத்து பற்றி தெரியாது என எதற்காக சொன்னார் என்பது தெரியவில்லை. விவாகரத்து செய்தி சினிமா வாழ்க்கையை பாதிக்காது. அப்பா அம்மா நான் நல்லா இருக்கணும்னு நினைக்கிறாங்க. என் முடிவை அவங்க ஏத்துக்கிட்டாங்க. என் மூத்த பையனிடம் நாங்கள் பிரிவது பற்றி புரியும் படி பேசினேன். அவர் ஓரளவுக்கு புரிந்து கொண்டுள்ளார். உண்மை ஒருநாள் நீதிமன்றம் மூலம் வெளிச்சத்துக்கு வரும். வீடு, கார் எல்லாமே நான் உழைத்து சம்பாதித்தது.
இந்த நிலையில் தன்னுடன் நினைத்துப் பேசப்பட்ட பாடகி குறித்தும் அவதூறாக பேசாதீர்கள் என ஜெயம் ரவி கூறியிருந்தார். தற்போது வந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் ஜெயம் ரவி அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் தனது மனைவி ஆர்த்தி மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் சென்னை ஈ.சி.ஆர் சாலையில் ஆர்த்தி வீட்டில் இருக்கும் தனது உடைமைகளை மீட்டு தருமாறு கூறியுள்ளார். இந்த செய்தி தான் இணையத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.




