தினமும் பொதுவாகவே காலையில் தூங்கி எழுந்தவுடன் டீ காபி குடிப்பதற்கு முன்பாக வெறும் வயிற்றில் அதிக தண்ணீர் அருந்த வேண்டும் என்று பலர் சொல்லி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இன்னும் ஒரு சிலர் மெக்காஃபி குடிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். பலர் தண்ணீர் குடிப்பதையே மறந்து விடுகிறார்கள். இந்நிலையில், தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி தற்போது பார்க்கலாம். காலையில் எழுந்ததும் காபிக்கு பதிலாக தண்ணீர் குடிப்பது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதால் நமது உடலில் வளர்ச்சிதை மாற்றம் தூண்டப்படுகிறது. ஒரு கிளாஸ் அதாவது 300 மில்லி அளவு நீர் குடித்தால் ஒன்றரை மணி நேரத்தில் நமது உடலில் ஏற்படும் வளர்ச்சிதை மாற்றத்தை 24% வரை அதிகரிக்க செய்கிறது.
மேலும், நமது உடலில் ரத்தத்தில் உள்ள நச்சுக்களும் கழிவுகளும் வெளியேற தண்ணீர் ஒரு முக்கிய பங்கு வருகிறது. தினமும் தூங்கி எழுந்து 60 நொடிகளில் தண்ணீர் அருந்துவதன் மூலம் பசியின் அளவை குறைக்கிறது. இதனால் தேவையற்ற பசி ஏற்படாமல் உடல் பருமன் ஆவதை தடுக்கிறது. மேலும் காலையில் இவ்வாறு தண்ணீர் அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மற்றும் நிளநீர் மண்டலம் வலுவடையும். உடலின் சருமத்தில் அதிக சுருக்கம் மற்றும் வறட்சி ஏற்படுத்தாமல் மிருதுவான சருமத்தை தரும். பொதுவாகவே அதிக அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் மலச்சிக்கலை நாம் தவிர்க்கலாம்.




