காலங்காலமாக கீழே அமர்ந்து சாப்பிடுபவர்களாக இருக்கட்டும் அல்லது கீழே உட்கார்பவர்களாக இருக்கட்டும் காலை மடைக்கி உட்காருவது வழக்கம், ஆனால் காலை மடக்கி உட்காருவதன் மூலம் நம் உடலுக்கு கிடைக்கக்கூடிய ஆரோக்கியத்தினை பற்றி இங்கு காண்போம்..
நம் முன்னோர்கள் கூறிய மருத்துவத்தில் இதுவும் ஒன்று, நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு உட்காரும்போது இடுப்புக்கு மேலே ரத்த ஓட்டம் அதிகமாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும் பொழுது மட்டுமே ரத்த ஓட்டம் சென்றால் போதும் மிக முக்கியமான உறுப்புகளாய் சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல் தான் உள்ளது, அப்படி இருக்கும் பட்சத்தில் ஒருவர் காலை தொங்க போடாமல் சமணங்கள் போட்டு உட்கார்ந்திருந்தால் அவருக்கு சக்தியும் ஆரோக்கியமும் கிடைப்பதாக ஆய்வு மற்றும் அறிவியல் உணர்த்துகிறது, எனவே சாப்பிடும் போது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும் ஏனென்றால் இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுக்கு பகுதிக்கு செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக கிடைக்கும் ஜீரணக் கோளாறு வராது..!!




