பாரம்பரிய அதிரசம் செய்வது எப்படி?
தமிழர்களின் பாரம்பரிய இனிப்புகளில் முக்கிய இடம் வகிக்கும் அதிரசத்தை, வீட்டிலேயே எளிமையாக சுவையாக செய்து மகிழலாம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 2 கப்
வெல்லம் – 1½ கப்
ஏலக்காய் – 4
சுக்குப்பொடி – ½ டீஸ்பூன்
கடலை எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
செய்முறை: முதலில் பச்சரிசியை கழுவி நன்கு வடித்து, சிறிது ஈரப்பதம் இருக்கும் நிலையில் ஏலக்காயுடன் சேர்த்து லேசான கொரகொரப்பான மாவாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் வெல்லத்தை சிறிதளவு தண்ணீரில் கரைத்து, கம்பி பதம் வரும் வரை காய்ச்சி வடிகட்டி, அதில் சுக்குப்பொடி சேர்க்கவும். இந்த வெல்லப் பாகுவை அரிசி மாவுடன் சேர்த்து நன்றாக பிசைந்து, மாவை 2 முதல் 3 நாட்கள் மூடி ஊற வைக்கவும்.
ஊறிய மாவை சிறிய உருண்டைகளாக எடுத்து, வாழை இலையில் அல்லது எண்ணெய் தடவிய பிளாஸ்டிக் தாளில் தட்டி, சூடான எண்ணெயில் இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
இவ்வாறு செய்தால், மணமும் சுவையும் நிறைந்த பாரம்பரிய அதிரசம் தயார். தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் குடும்பத்தினருடன் சுவைத்து மகிழலாம்.




