கிராமப்புற முன்னேற்றத்தில் இந்தியாவிற்கு வழிகாட்டும் திட்டங்கள் தமிழக அரசு பெருமிதம்..!!

கிராமபுரம் முன்னேற்றத்தில் இந்தியாவிற்கு வழிகாட்டும் திட்டங்களை நிறைவேற்றி வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது..‌

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது இந்தியாவின் உயிர் அதன் கிராமங்களில் தான் உள்ளது என்றார் அண்ணல் காந்தியடிகள் கிராமப்புற மக்களின் பெரும்பாலோர் விவசாயிகள் நெசவாளர்கள் உடல் உழைப்பே மூலதனமாக கொண்டு உழைக்கும் தொழிலாளர்கள் இந்த மக்களின் உழைப்பால் தான் ஏனையோர் வாழ முடிகிறது, இந்த கிராமப்புற மக்களின் மேம்பாட்டிற்காக கிராம வளர்ச்சிக்கு தனி முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் திமுக ஆட்சி அமையும் காலங்களில் எல்லா கிராமப்புறங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் அறிய பலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன, முதலமைச்சர் மு க ஸ்டாலின் 40 மாத கால திராவிட மாடல் ஆட்சியில் கிராமப்புறங்களில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்துவதில் தனி கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்துகின்றனர், கிராம உள்ளாட்சிகளில் போதுமான தகவல் தொழில்நுட்ப கட்டுமானத்தை உறுதி செய்திடும் விதமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பர் 20525 கிராம ஊராட்சிகளிலும் கணினிகள் பிரிண்டர்கள் மற்றும் தடையில்லா மின் கலன்கள் சாதனம் ஆகியவை நிறுவப்பட்டு ஊராட்சி அலுவலகங்களில் பயன்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளன, இந்த வகையில் சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, திட்ட அனுமதி, மனைப்பிரிவு அனுமதி மற்றும் கட்டிட அனுமதி போன்ற குடிமக்கள் நலன் சார்ந்த அரசு சேவைகளை மக்கள் இணையதளம் வாயிலாக எளிதில் பெற உதவும் வகையில் ஊராட்சிகளில் மின் ஆளுமைக்கான (Vptax portal) நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது..!!

Read Previous

தாய் கண்டித்ததால் விபரீதம் மாணவி தூக்கு போட்டு தற்கொலை…!!

Read Next

நடிகை கஸ்தூரி முன் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular