Oplus_131072
கும்பகோணம் பில்டர் காபி என்றால் யாருக்குத்தான் ஆனால் கும்பகோணம் பில்டர் காபி இருக்கும் சுவையில் வீட்டிலேயே அதே ஸ்டைலில் கும்பகோணம் பில்டர் காபி செய்வது எப்படி என்பதை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
கும்பகோணம் ஃபில்டர் காபி
தேவையான பொருட்கள்
காபி தூள்
சர்க்கரை
பால்
தண்ணீர்
செய்முறை
முதலில், ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும்.
காபி ஃபில்டரில், நான்கு ஸ்பூன் காபி தூள், 1/2 டம்ளர் சுடு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து விடவும்.
பின், பாத்திரத்தில், ஒரு டம்ளர் பால், 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து காய்ச்சவும்.
காய்ச்சிய பாலுடன், தேவையான அளவு சர்க்கரை, ஃபில்டரில் வடிகட்டிய டிகாஷன் நான்கு ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து விடவும்.




