நடிகர் சல்மான் கானின் சகோதரரும் நடிகருமான சோஹைல் கான், தனது சிறுவயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
அந்த சம்பவம் குறித்து அப்போது யாரிடமும் கூறத் தயக்கமாக இருந்ததாகவும், பல ஆண்டுகள் கழித்து பெரியவரான பிறகே தனது தந்தையிடம் அதைப் பகிர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சோஹைல் கானின் இந்த மனம் திறந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரவலாக கவனம் பெற்றுள்ளது. இதையடுத்து, பலரும் தங்களது சிறுவயதில் சந்தித்த பாலியல் துன்புறுத்தல் அனுபவங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாகப் பேசுவதும், பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பாக புகார் அளிக்கக்கூடிய சூழலை உருவாக்குவதும் அவசியம் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.




