குலதெய்வ சாபத்தை நீக்குவதற்கான பிரத்தியேக வழிபாடு..!!

Oplus_131072

குலதெய்வ சாபத்தை நீக்குவதற்கான பிரத்தியேக வழிபாடு…

 

குலதெய்வத்தின் பரிபூரணமான அருள் இல்லை என்றால் உங்களது வாழ்க்கையில் நஷ்டங்களும் கஷ்டங்களும் தொடரும்.

பெரும்பாலானவர்கள் தங்களது குலதெய்வம் எது? என்று தெரியாது என எளிதாக சொல்லி விடுவர். ஆனால் இது முற்றிலும் தவறானது. ஏனெனில் அவர்கள் தங்களது குலதெய்வம் எது என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை என்பதே உண்மை.

குல தெய்வத்தின் தோஷத்தை நீக்க உங்களது குலதெய்வம் எது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அதற்கான முயற்சியில் நீங்கள் ஈடுபட்டாலே குலதெய்வத்திற்கான குறிப்புகள் உங்களை வந்தடையும்.

அதே சமயம் குலதெய்வம் உங்கள் மீது கோபமாக இருந்தால் அதனை சாந்தப்படுத்த நீங்கள் எப்போது வழிபட வேண்டும் என்றால் பௌர்ணமி மற்றும் அமாவாசை திதிகளில் நாளில் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

நீங்கள் பிறந்த தமிழ் மாதத்தில் இருந்து ஐந்தாவது மாதத்தில் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் நீங்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்திலிருந்து ஆறாவது நட்சத்திரம் வரும் நாளில் நீங்கள் குலதெய்வ வழிபாட்டை மேற்கொண்டால், குலதெய்வத்தின் கோபம் சாந்தமடையும். குலதெய்வ தோஷமும் நீங்கும்.

பஞ்சாங்கத்தில் ப்ரீத்தி , விருத்தி , சிவம் ஆகிய மூன்று நாம யோகம் இருக்கும் தருணத்திலும் கிம்ஸ்த்துகனம் எனும் கரணம் நடைபெறும் தருணத்திலும் குலதெய்வ வழிபாட்டை மேற்கொண்டால் உங்கள் மீது குலதெய்வம் கொண்டிருக்கும் கோபம் குறைந்து, மறைந்து, மகிழ்ச்சி அடைந்து, ஆசி வழங்கும்.

குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளும் நாளில் குறைந்த பட்சம் உங்களுடைய பொருளாதார சக்திக்கு ஏற்ற அளவில் அன்னதானம் வழங்குவது கூடுதல் பலனை வழங்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

Read Previous

மனதை தொட்ட நம்பிக்கை வரிகள்..!! கட்டாயம் படிங்க..!!

Read Next

மாறாத தழும்புகள்..!! அருமையான சிறுகதை..!! முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதை உணர்த்துகிறது இந்த பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular