நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் குளிப்பதற்கு குளியல் பொடி என்று வீட்டிலேயே இயற்கையான முறையில் தயாரித்து அதை குளியலுக்கு பயன்படுத்துவார்கள். பெரியவர்களில் இருந்து சிறியவர்கள் வரை ஏன் பிறக்கும் குழந்தைகள் வரை கூட இந்த குளியல் பொடியை தான் பயன்படுத்துவார்கள். இன்னும் ஒரு சில கிராமப்புறங்களில் குழந்தைகளுக்கு குளியல் பொடி என்பது பயன்படுத்தப்படுகிறது என்றாலும் இந்த நவீன காலகட்டத்தில் பலரும் பலவிதமான செயற்கையான குளியல் முறைகளை பின்பற்றி வருகிறார்கள். குளிப்பதற்கு சோப் பயன்படுத்துகிறார்கள். சிலர் பாடி வாஷ் போன்ற வற்றை கூட பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் நாம் குளிக்கும் போது ஒரு கைப்பிடி உப்பை அந்த தண்ணீரில் சேர்த்து அந்த தண்ணீரில் நாம் குளிப்பதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
சமையலுக்கு பயன்படுத்தும் கடல் உப்பு என்பது சமையலுக்கு ஏற்ப தயாரிக்கப்படுகிறது. ஆனால் குளியலுக்கு பயன்படுத்த ஒப்பானது எந்த கலப்படம் என்று நேரடியாக ஆவியாகதிலிருந்து பெறப்படுகிறது. இந்த உப்பில் தாது பொருட்கள் இருப்பதால் சருமத்திற்கும் மிகவும் நல்லது. மேலும் இதில் அதிக மினரல்கள் உள்ளது.இந்த உப்பை நீங்கள் குளிக்கும் தண்ணீரின் அளவிற்கு ஏற்ப நான்கு முதல் பத்து கப் வரை கூட சேர்க்கலாம். சாதாரண நீர்த்தொட்டியில் கால் கப் கடல் உப்பு சேர்க்கலாம். 20 நிமிடங்கள் இந்த உப்பு சேர்த்து நன்றாக ஊற வைத்து பின்னர் நாம் குளிக்க வேண்டும். இவ்வாறு குளிப்பதன் மூலம் நாம் ஆரோக்கியமான சருமத்தை பெற முடியும். மேலும் இவ்வாற நாம் குளிப்பதால் ரத்த ஓட்டம் சீராகும் சருமம் பொலிவாகவும் மாறும். உடல்வலி தசை வலி இருந்தாலும் உடனே சரியாகிவிடும். ஆனால், சிலருக்கு இந்த உப்பு குளியல் பிரச்சனைகளை ஏற்படுத்த கூட வாய்ப்பு உள்ளது. அதனால் நீங்கள் இந்த குளியலை தொடர்வதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்வது மிகவும் நல்லது.




