குளிக்க போறீங்களா.. கொஞ்சம் உப்பு எடுத்துட்டு போங்க..!! ஏன் தெரியுமா..??

Oplus_131072

 

மனிதனின் வாழ்வில் உப்பு என்பது மிக மிக முக்கியமான ஒன்றாகும். உப்பில்லா பண்டம் குப்பையிலேயே என்பது நமது மூத்தார் சொல்லும் பழமொழி. உணவில் உப்பு சற்று குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாகிவிட்டாலும் சரி இரண்டுமே உணவை வீணாக்கிவிடக்கூடும்.

உப்பு அளவோடு இருந்தால் மட்டும் தான் உணவும் சரி, மனிதனின் உடலும் சரி நன்றாகவும், ஆரோக்கியமாக இருக்கும். அதுபோலவே, சாப்பாட்டில் மட்டும் இல்லாமல் நாம் குளிக்கும் தண்ணீரிலும் உப்பு கொஞ்சம் சேர்த்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்று ஆராய்ச்சி கூறுகின்றது.

வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் உப்பு சேர்த்துகொண்டு குளித்தால் உடலில் இருக்கும் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் தீர்ந்து போகும். குறிப்பாக சொறி சிரங்கு உள்ளிட்ட பிரச்சனையை கொண்டு இருப்பவர்கள் இப்படி செய்தால் கிருமிகள் விரைவில் அழிந்துவிடும். மேலும், சருமத்தில் எரிச்சல், அரிப்பு இருப்பவர்கள் தண்ணீரில் சிறிது உப்பு கலந்து குளிப்பதன் மூலமாக இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு கொள்ளலாம். நீரில் உப்பு சேர்த்து குளிக்கும் பட்சத்தில் அன்றைய நாள் சுபமாகும் என்று ஜதீகம் கூறுகின்றது.

 

Read Previous

பொடுகு தொல்லை நீங்க சில இயற்கை வைத்திய குறிப்புகள்..!!

Read Next

1990 ம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தவர்களுக்கு மட்டும் இந்த அருமை புரியும்..‌!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular