குளிர்சாதன பெட்டியில் உணவுப் பொருட்களை வைக்கும் முறை தெரியுமா?
குளிர்சாதன பெட்டியில் வாடை வராமல் இருக்க எலுமிச்சை பழத்தை பாதியாக வெட்டி உள்ளே வைக்க வேண்டும். பால் குழம்பு சட்னி வகைகள் முதலியவற்றை சூடாக உள்ளே வைக்கக்கூடாது. பழச்சாற்றை கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். காய்கறிகளை எப்பொழுதும் காகிதத்தால் சுருட்டி துணி பையில் போட்டு வைத்தால் கெட்டுப் போகாமல் தோல் சுருங்காமல் இருக்கும் .வெண்ணெய் ,பாலாடை கட்டி, பன்னீர் போன்ற உணவு பொருட்களை குளிர்சாதன பெட்டியில் ஃப்ரீசரில் தான் வைக்க வேண்டும் அப்படி வைத்தால் தான் அதில் உள்ள சத்துக்கள் வீணாகாமல் இருக்கும் பச்சை மிளகாய் இஞ்சி கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் கெடாமலும் நிறமும் மாறாது இருக்கும் தேங்காயை உடைக்காமல் ஃப்ரிட்ஜில் வைத்து இருந்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் தர்பூசணி பழம் சாத்துக்குடி எலுமிச்சை போன்ற பழங்களை அதிகப்பட்சம் ஒரு வாரம் வரை குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்கலாம் எக்காரணத்தைக் கொண்டும் வாழைப்பழங்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது அவற்றை எப்போதுமே நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் தான் வைக்க வேண்டும் இரண்டு கதவு உள்ள பெட்டியில் அதாவது பிரீசரில் உள்ள இடம் காலியாக இருக்குமானால் நீங்கள் சேமியா ரவை பிரியாணி அரிசி பருப்பு வகைகள் கடலை மாவு பாக்கெட் இதெல்லாம் வைத்துக் கொள்ளலாம் அப்படியே இருக்கும்.




