குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் மாம்பழ மில்க் ஷேக் இப்படி செஞ்சு பாருங்க..!!

Oplus_131072

மாம்பழ மில்க் ஷேக் செய்வது எப்படி….

தேவையானவை:

மாம்பழம் – 200 கிராம் அளவுக்கு இருக்கும் 2 பங்கனபள்ளி அல்லது மல்கோவா, காய்ச்சி ஆற வைத்த பால் – 2 கிளாஸ், மாம்பழ ஐஸ்க்ரீம் – 3 ஸ்கூப், மாம்பழ எசன்ஸ் – 2 துளிகள், சர்க்கரை – 6 டீஸ்பூன், ஐஸ்க்யூப்ஸ் – 2 டிரே.

செய்முறை:

மாம்பழத்தின் சதைப்பகுதியை மட்டும் மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளுங்கள். இதனுடன், காய்ச்சி ஆறவைத்த பால், சர்க்கரை, மாம்பழ எசன்ஸ், இரண்டு ஸ்கூப் மாம்பழ ஐஸ்க்ரீம் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். வாய் அகன்ற ஒரு பாத்திரத்தின் உள்ளே ஐஸ்கட்டிகளைப் போட்டு, அதன் உள்ளே ஒரு சிறிய பாத்திரத்தை வைத்து, தயாரித்திருக்கும் மில்க் ஷேக்கை அதில் ஊற்றுங்கள். பரிமாறும்போது, இதை ஒரு கிளாஸில் ஊற்றி, மீதமிருக்கும் ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீமை அதன் மேல் வைத்தால்… அசத்தலாக இருக்கும்!

 

Read Previous

சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய பழங்கள்..!!

Read Next

குழந்தைகளிடம் பேசுவது ஒரு கலை என்பதை உணர வைத்த பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular