குழந்தைகளுக்கு கண்டிப்பா கொடுக்கலாம் இந்த மட்டன் மூளை ப்ரை கடைகளில் அதிகமாக கிடைக்காது கறிக்கடையில் சொல்லி வைத்த தான் இந்த மட்டன் மூளையை வாங்க வேண்டும்.
தேவையான பொருட்கள்![]()
10 சின்ன வெங்காயம்
ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
ஒரு கொத்து கருவேப்பிலை
சிறிதளவு கொத்தமல்லி இலை
ஒரு பச்சை மிளகாய்
தேவையான அளவு உப்பு
எண்ணெய்
சோம்பு 1/4 ஸ்பூன்
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்
மட்டன் மசாலா 1/2 ஸ்பூன்
மல்லித்தூள் 1 ஸ்பூன்
செய்முறை ![]()
கடாயில் எண்ணெய் சேர்த்து சோம்பு பச்சை மிளகாய் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்
வெங்காயம் வதக்கிய பின் கறிவேப்பிலை இஞ்சி பூண்டு விழுது சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கிய பின்
மஞ்சள் தூள் மிளகாய் தூள் தனியா தூள் மட்டன் மசாலா தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்
சிறிதளவு தண்ணீர் தெளித்து மூளையை சேர்த்துக் கொள்ளவும்
மூளை இரண்டு நிமிடம் வதக்கிய பின் கரண்டியை வைத்து சிறிது சிறிது துண்டுகளாக வெட்டவும்
வானலியில் கடாயில் ஒரு தட்டை மூடி ஐந்து நிமிடம் மிதமான தீயில் மூளையை வேக வைக்கவும் நன்றாக சுண்டி வந்தபின் கடைசியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கினோம் ஆனால் சுவையான மூளை ப்ரை தயார்..




