குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடும் தேங்காய் போளி இப்படி செஞ்சு பாருங்க..!!

Oplus_131072

தேங்காய் போளி செய்வது எப்படி….

தேவையானவை:

மைதா மாவு – ஒரு கப்,
நெய் – 2 டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் – 2 கப்,
வெல்லம்- 2 கப்
ஏலக்காய்த்தூள், மஞ்சள் தூள் – சிறிதளவு,
உப்பு – கால் டீஸ்பூன்.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மைதாவுடன் மஞ்சள் தூள் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும். பிறகு சிறிதளவு நெய்விட்டு பிசைந்து, அரை மணி நேரம் மூடி வைக்கவும். வெல்லத்துடன் கால் கப் தண்ணீர்விட்டு ஒரு கொதிவிட்டு இறக்கி வடிகட்டவும். வாணலியில், சிறிதளவு நெய்விட்டு, தேங்காய், வெல்லக்கரைசல் சேர்த்துக் கிளறவும். இதுவே பூரணம் (தளர்வாக இருக்கும்போது இறக்கவும்).
மைதா மாவை சிறிய உருண்டைகளாக்கி வாழை இலையில் தட்டி, நடுவே பூரணம்வைத்து மூடித் தட்டவும். தோசைக்கல்லில் போளிகளைப் போட்டு இருபுறமும், நன்றாக வேகவிட்டு எடுக்கவும்.

 

Read Previous

திருநெல்வேலி அல்வா சாப்பிடணும்னு ஆசையா..?? அப்போ இந்த பதிவை படிச்சு நீங்களே வீட்ல ஈஸியா செஞ்சு சாப்பிடுங்க..!!

Read Next

சபரிமலைக்கு தென்னம்பிள்ளையை எடுத்துச் செல்வது ஏன்..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular