பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்தால் அடுத்த நிமிடம் தட்டு காலியாகிவும்..!!

ஸ்கூல் முடிந்ததும் வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு இதை சாப்பிடுவதற்கு ஸ்னாக்ஸ் செய்து தந்தால் அடுத்த நொடி தட்டு காலியாகிவிடும். அப்படியான குழந்தைகளுக்கு சத்தாகவும், சுவையாகவும் கேபேஜ் பக்கோடா செய்து கொடுங்கள். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து சாப்பிடுவார்கள். கேபேஜ் பக்கோடா எப்படி செய்வது என இந்த பதிவில் காண்போம.

தேவையானவை:

அரிசி மாவு – 50 கிராம்
பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் – 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை – 1 கொத்து
கடலை மாவு – 100 கிராம்
எண்ணெய் – 1/4 லிட்டர்
உப்பு – தேவையான அளவு
பெரிய வெங்காயம் நறுக்கியது – 1
முட்டைக்கோஸ் – 1

செய்முறை:

முட்டைக்கோசை பொடி பொடியாக வெட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் வெட்டி வைத்த முட்டைக்கோஸ், வெங்காயம், கொத்தமல்லி, மிளகாய் தூள், உப்பு, பெருங்காயம் சேர்த்து பிசைந்த பின்னர் அரிசி மாவு, கடலை மாவு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பக்கோடா மாவு பதத்திற்கு பிசைந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கலந்து வைத்த பக்கோடா மாவை சிறிதாக எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். பின் இதனை தக்காளி சாஸ் அல்லது புதினா சட்னியுடன் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கவும். அவ்வளவுதான் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கேபேஜ் பக்கோடா தயார்.

Read Previous

வெண்டைக்காயை இப்படி செய்து பாருங்கள்..!! அசத்த வைக்கும் செய்முறை..!!

Read Next

ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் போதும்; பழைய நகைகள் புதுசு போல் ஜொலிக்கும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular