கேரளா குடம்புளி மீன் குழம்பு..!! முழு செய்முறை விளக்கம் உள்ளே..!!

கல் சட்டியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடு செய்யவும். வெந்தயம் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதன்பின் பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.நீளமாக நிற்க சின்ன வெங்காயம் மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

இதில் மிளகாய் தூள் மஞ்சள் தூள் மல்லி தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். குடம்புளியை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறிய பின் அந்த தண்ணீரை குழம்பிற்கு உபயோகப்படுத்த வேண்டாம். வெறும் புலியை வதங்கி இருக்கும் வெங்காயத்தில் சேர்த்து ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு பத்து நிமிடங்கள் சிறு தீயில் கொதிக்க விடவும்.

தேங்காய் மற்றும் தக்காளியை நறுக்கி மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைக்கவும். அரைத்த விழுதை சட்டியில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு சேர்க்கவும்.

இப்பொழுது மீன் துண்டுகளை சேர்த்து மூடி போட்டு சிறு தீயில் மீன் வேகம் வரை வேக வைக்கவும். இறுதியாக கருவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

முற்றிலும் சுவையாக கேரள முறையில் குடம்புளி சேர்த்த மீன் குழம்பு சாதத்துடன் சுவையாக இருக்கும்.

Read Previous

2025-ல் சிறந்த 8 மியூச்சுவல் ஃபண்டுகள்..!! இதில் முதலீடு செய்தால் அதிக லாபம் உறுதி..!!

Read Next

அம்மா உணவகங்களை புதுப்பிக்க ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு..!! சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular