டெங்கு காய்ச்சலை தடுக்கும் இயற்கை மருந்து கொய்யா இலை..!!

Oplus_131072

டெங்கு காய்ச்சலை தடுக்கும் இயற்கை மருந்து கொய்யா இலை!

கொய்யா இலைகளை பயன்படுத்தி டெங்கு காய்ச்சலை தடுக்கும் மருந்து தயாரிக்கலாம். துளிராக இருக்கும் கொய்யா இலைகள் 3 எடுத்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கவும்.

இது டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பு மருந்தாகிறது. காய்ச்சல் உள்ளவர்கள் கொய்யா இலை தேனீர் குடித்துவர விரைவில் குணமாகும். கொய்யா இலைகள் நோய் எதிர்ப்பு சக்தி உடையது. டெங்கு காய்ச்சலை குணமாக்கும்.

டெங்கு வந்தால் அதிகமான குளிர், உடல் வலி இருக்கும். அப்போது இந்த தேனீரை குடித்தால் நன்மை ஏற்படும். இது முதல் தரமான மருத்துவ சிகிச்சை. காய்ச்சல் தணியும் வரை தேனீர் தயாரித்து குடிக்கலாம். எல்லா விதமான காய்ச்சலும் குணமாகும்.

நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் கடை சரக்குகளில் இருந்து காய்ச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கோரைக் கிழங்கு, சுக்கு, இந்துப்பு, கடுக்காய், கறிவேப்பிலை, தேன்.

அரை கிராம் இந்துப்பை தூள் செய்து எடுத்துக் கொள்ளவும். சிறிது சுத்தப்படுத்திய கோரைக் கிழங்கு, கறிவேப்பிலை, சிறிது சுக்குப்பொடி, கடுக்காய் பொடி சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். பின்னர், வடிகட்டி ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து குடிக்கவும். இது விஷ காய்ச்சல், கடுமையான உடல் வலியை குணமாக்கும். கண்கள் சிவந்து போவது, சளி பிரச்னையை சரிசெய்கிறது.

Read Previous

கல்லீரலை பாதுகாக்கும் அற்புதமான கிழங்கு கட்டாயம் சாப்பிடுங்கள்..!!

Read Next

வெரிகோஸ் நரம்பை குணப்படுத்தும் பச்சை தக்காளி வைத்தியம் பற்றித் தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular