Oplus_131072
கோழிக் குழம்பு செய்வது எப்படி…..
தேவையான பொருட்கள்:
கோழி – 500 கிராம், உப்பு, புளி, சோம்பு, பட்டை இலை, கறிவேப்பிலை சிறிதளவு, தக்காளி – 2, எண்ணெய் – 3 ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
மசாலா அரைக்க: மிளகாய் வற்றல் – 10, மல்லி – 3 ஸ்பூன், தேங்காய்ப்பூ – 3 ஸ்பூன், முந்திரி பருப்பு – 6, சோம்பு, சீரகம், மிளகு – தலா 1 ஸ்பூன், சின்ன வெங்காயம் – 250 கிராம், பூண்டு – 6 பல்.
செய்முறை:
கோழிக்கறியை நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்யவும். மிளகாய், மல்லியை வறுத்து அரைத்து தனியாக வைத்துக்கொள்ளவும். மற்ற பொருட்களை மசாலாவாக அரைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, பட்டை இலை சோம்பு சேர்த்து வதக்கி, வெங்காயம், தக்காளி சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். இதில் சுத்தம் செய்த கோழிக்கறி, மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் சுண்டும் வரை வதக்கி அரைத்த விழுதை சேர்த்து மேலும் வதக்கவும். இரண்டு டம்ளர் தண்ணீரில் உப்பு, புளியை கரைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.
பத்து நிமிடம் கழித்து, அரைத்த மசாலா, நிறைய கறிவேப்பிலை சேர்த்து சேர்த்து நெய் ஒரு ஸ்பூன் (நல்லெண்ணெயும் உபயோகிக்கலாம்) விட்டு நன்றாக கிளறி மூடிவைத்து, கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.




