கோவை துடியலூர் பகுதியில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த இளம்பெண்ணை மிரட்டி தனியாக அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக காவலர் மீது புகார் எழுந்தது.
இதுதொடர்பாக இளம்பெண்ணின் ஆண் நண்பர் உயர் காவல் அதிகாரிகளிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானதாகக் கூறப்படும் நிலையில், துடியலூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் கைது செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




