நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே முட்டை ஏற்றிச் சென்ற மினி லாரி, சாலையோர மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மோதியதில் தொட்டி இடிந்து விழுந்தது.
இந்த கோர விபத்தில் லாரியில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.




