கோவை : ஃபிளிப்கார்ட்டின் இ-காமெர்ஸ் நிறுவனங்களில் சோதனை..!! காலாவதியான 278 கிலோ பேரீச்சை பழங்கள் பறிமுதல்..!!

கோவையில் ஃபிளிப்கார்ட்டின் இ-காமெர்ஸ் நிறுவனங்களில் நடைபெற்ற சோதனையில் காலாவதியான 278 கிலோ பேரீச்சை பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவையில் ஃபிளிப்கார்ட்டின் இ-காமெர்ஸ் நிறுவனங்களில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா தலைமையில் அதிகாரிகள்  திடீர் சோதனை மேற்கொண்டனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள 37 இ-காமர்ஸ் சேமிப்பு கிடங்குகளிலும் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில் ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் நடைபெற்ற சோதனையில் காலாவதியான 278 கிலோ பேரீச்சை பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து அவற்றை அங்கேயே உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அழித்தனர்.

Read Previous

சினிமாவை விஞ்சிய கொலை..!! 10 ஆண்டு ரிவென்ஞ்ச்.. பழிதீர்த்த இளைஞர்..!!

Read Next

ஹன்சிகாவுடன் விவாகரத்து?.. கணவர் தரப்பு விளக்கம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular